உத்தரகண்ட் மாநில மக்கள் இடர்தீர்க்கும் பணியில் ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடம்
காஞ்சீபுரம், ஜøன் 22 : மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பெரிதும் பாதிப்படைந்துள்ள உத்தரகண்ட் மாநில மக்களுக்கு உதவிடும் வகையில் என்றும் பொதுநலப் பணிகளில் முன் நிற்கும் ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடம் தற்போதும் முன் வந்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ளஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடத்தின் கிளைகள் மூலம் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஸ்ரீமடம் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இமயம் முதல் குமரி வரையில் விரிந்துள்ள பாரத தேச மக்கள் நாமனைவரும் ஒரே குடும்பத்தினர் என்ற உணர்வுடன் அனைவரும் இந்த நிவாரணப் பணியில் ஈடுபட வேண்டுமாகக் கேட்டுக் கொள்கிறோம். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் குடும்ப உறுப்பினருக்குச் செய்வதாக நினைத்து உரிமையுடனும் பாசத்துடனும் உதவி செய்யக் கோருகிறோம்.
ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களால் இயன்ற அளவு பழைய துணிகள் (போர்வை, பெட்ஷீட், ஸ்வேட்டர் முதலியன) மளிகை சாமான்கள் மற்றும் காலாவதி ஆகாத மருந்துகள், டானிக்குகள், சிரப்புகள் முதலியவற்றை அவர்களுக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடம் ஸ்ரீ சங்கரமடத்தில் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள உத்தரகண்ட் மாநில அரசு, மத்திய அரசு ஏஜன்சிகள் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட துணிகள், மருந்துகள், மளிகைப் பொருட்கள் யாவும் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சென்றடையுமாறு ஏற்பாடுகள் செய்யப்படும். குடும்ப உறுப்பினர்களையும், எல்லா உடைமைகளையும் இழந்து தவிக்கும் உத்தரகண்ட் மாநில மக்களுக்குச் செய்யும் தொண்டு மகேசன் தொண்டாகும். இம்மாநில மக்கள் இழந்த வாழ்க்கையை மீட்டுக் கொடுப்பதில் மத்திய மாநில அரசுகளுடன் நாம் அனைவரும் இணைந்து செயற்புரிய வேண்டிய தருணம் இது.
பண உதவி செய்ய விரும்புவோர் தர்மப்ரபோதனா டிரஸ்ட் என்ற பெயருக்கு காசோலை மூலமோ அல்லது வரைவு காசோலை மூலமோ அனுப்பக் கோருகிறோம். அனுப்ப வேண்டிய முகவரி:
J.சீதாராமன், உத்தரகண்ட் நிவாரணப் பணி ஒருங்கிணைப்பாளர், ஸ்ரீ காஞ்சீ காமகோடி பீடம், நெ.1, சாலைத்தெரு, காஞ்சீபுரம் - 631502.
தர்மப்ரபோதனா டிரஸ்ட் கணக்கிற்கு நேரடியாக அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பவும்.
வங்கியின் பெயர் : இந்தியன் வங்கி,
கிளை : சங்கரமடம் கிளை
ஊர் : காஞ்சீபுரம்
சேமிப்புக்கணக்கு எண் : 411552252
IFSC Code number : IDIB000S085
பொருட்களாக அளிப்போர் கீழ்க்கண்ட எங்கள் கிளைகளில் ஏதேனும் ஒன்றில் கொடுத்து பதிவு செய்து கொள்ளக் கோருகிறோம்.
KANCHIPURAMSrikaryam & Agent |
CHENNAISri Kanchi Kamakoti Sankara Matam |
CHENNAI
Sri Kanchi Kamakoti Sankar Math |
COIMBATORESri Kanchi Kamakoti Sankara Matam |
KUMBAKONAMSri Kanchi Kamakoti Sankara Mutt, |
TIRUNELVELISri Kanchi Kamakoti Sankara Matam |
HYDERABAD |
LUCKNOWSri Kanchi Kamakoti Veda Patasala |
VARANASISri Kanchi Kamakoti Sankara Math, |
VIJAYAWADASri Kanchi Kamakoti Peethastha Sri Venkateswara Swami Sri Chandra Mouleeswara Swami Varla Devasthanam,Sri Kanchi Sankar Math, Venkateswarapuram, Vijayawada – 520010. (Tel.0866-2476560) Incharge: Sri Maganti Subramaniam |
VISHAKAPATNAM |
MUMBAISri Sankara Mattham, |
BANGALORESri Kanchi Kamakoti Shankara Mutt Sri Sankara Smartha Samskruta Paatashala |
NEW DELHISri Kanchi Kamakoti Sankara Mutt |
KOLKATTAThe Manager |
PUNESri Kanchi Kamakoti Peetam |
His Holiness advising devotees to contribute to the cause
His Holiness seeing the relief material being sent to Uttarakhand from Srimatam
Clothes being sent